பிறக்குது பிறக்குது புது உலகம்
புறப்படு என் தோழா ..
பணம் பத்து வந்து போகட்டும்
பாச பந்தம் அதை நீ மறந்து போகாதே
நல்ல பாதை மாற்றி பயணம் போகாதே
உன் சோகங்களுக்கு சுதந்திரம் கொடுத்து விடு
அதன் தாக்கம் தான் தொலைந்து போகட்டும்
அன்பு அது அளவில்லாது பொழியட்டும்
பண்பு அது பெருமளவு பெருகட்டும்
மனதில் சிறு மாற்றம் கொண்டு வா
அந்தச் சீற்றம் சில சிறப்புகள் - ( புகழ் ) செய்துவிடும் - உன்
முகத்தில் புதுப்பொழிவு பூத்துவிடும் ..
கானகத்தில் புது காவியம் படைத்து விடு
காலம் உன் கதையை கூறட்டும் ..
இளைப்பாராது உன் இலக்கை அடைந்து விடு
இவ்வுலகம் உன்னை உற்றுப் பார்க்க விடு ..
தோல்விகள் தொலைத்து
வெற்றிக்கு ஒரு வேள்வி நடத்து
வையகத்தை உன் கையகத்தே கொண்டு வா..
பறவைகள் பறப்பது போல்
சிறகுகள் விரித்து
சிந்தனை செழித்து
சந்ததிகளுக்கு ஒரு சான்றாய்
சாதனை செய்துவிடு ..
புறப்படு என் தோழா ..
பிறப்பது நம் உலகம் .. !!!
5 comments:
hi anna... its so nice... keep updating... expecting a lot...
வணக்கம் இராமநாதன் அவர்களே!!!! கவிதை நல்லா இருக்கு... உங்கள் பேனா மேலும் பல படைப்புகள் படைக்க என் வாழ்த்துகள் :)
@NU.....
நன்றி தோழி அவர்களே. !!!
நன்றி நன்றி
Windows இன் வாயிலாக தன் உலகை காணும் blogspot நடுவில், தமிழின் சிறுகூற்று ...
கோவை பேச்சில் சின்னதொரு Chennai சந்திப்பு
-என் நல்வாழ்த்து,உன் பேனாவிற்கு!!
@பூர்ணிமா வெ
நன்றி தோழி !
Post a Comment