Friday, May 6, 2011

நானா சொன்னேன் ?

நானா சொன்னேன் என் கண்களிடம்
அவளை பார் என்று ..
நானா சொன்னேன் என் பேனாவிடம்
அவள் பெயரை மட்டும் எழுது என்று..
நானா சொன்னேன் என் கால்களிடம்
அவளை நோக்கி நீ நட என்று..
நானா சொன்னேன் என் நாவிடம்
அவளை பற்றி கவிதை என்று..
நானா சொன்னேன் என் விரல்களிடம்
அவளை பற்றி மட்டும் இசை மீட்டு என்று ...
இப்படி நானாக சொல்லாமல்
எல்லாம் தானாக நிகழ்கிறது
அவள் மீது நான் கொண்ட காதல் போல !!!!

Thursday, April 28, 2011

கடல் அலையின் காதல்


ஒரே ஒரு முறை ஊர் வந்த போது 
கால் நனைத்துப்போனாயோ  கடல் அலையில் 
கடலுக்கும் உன் மேல் காதல் வர 
இதோ இன்று வரை 
வந்து வந்து பின் செல்கிறது 
மீண்டும் உன் கால்கள் தழுவமுடியாத 
ஏக்கத்தோடு - என்னைப்போலவே. !